மூன்று வருட வனவாசம் முடிவு பெறும் நாள் மிக அருகில் .ஆம் . வனம் முதலில் அழகா தான் இருந்தது அங்குள்ள மிருகங்களின் குணம் அறியாத வரையில் .!!!
மே மாதம் ௨00௫ நானும் ஒரு பொறியாளனாய் (பெயரில் மட்டும் ) உலகத்தில் கால் பத்தித்த நாள் . எனக்கும் ஒரு சாப்ட்வேர் கம்பெனி யில் வேலை குடுத்தார்கள் . அன்று அந்த கம்பெனி எனக்கு ஒரு கோவிலாகவும் , அங்கு வேலை பார்பவகள் கடவுளாகவும் தென்பட்டனர் .ஆம் . சிலர் பிரம்மா செய்யும் வேலையை ( தேவேலோப்மேன்ட்) செவனே செய்பவர்கள் . வேறு சிலரோ விஷ்ணுவின் வேலையை மிக சிறப்பாக செய்பவர்கள் . மீதம் உள்ள அனைவரும் சிவனின் திருவுருவங்கள் . ஆம் . டெஸ்டிங் செய்பவர்கள் .இங்கே எனக்கு ஒரு ஐயம் எழுகிறது . ஏன் பெரும்பாலான பிராமகளும் , விஷ்ணுவும் அமெரிக்காவில் படைக்கப்பட்டு ,இங்கே இந்தியாவில் பல சிவாபெருமான்கள் திணிக்கபட்டிருகிறார்கள். இந்தியனுக்கு பிராமவின் வேலையை செய்ய தெரியாதா? கேள்வி கேட்கும் நான் ஒரு சிவஜாதி .
மூன்று வருடம் டெஸ்டிங்கில் இருந்தேன். ஆமாம் என் வாழ்வின் சோதனை காலம் இது தான் என்பதை நான் முன்பே அறிந்திருக்க வில்லை .
Subscribe to:
Post Comments (Atom)
Weight....Super...
ReplyDeleteAnna Enga ponalum Ithee vanamthangoooiiii,,,Enna Anga konjam alaga mayilum,,,,mailargalum niraye irukum...Inga kuilgalum kakaiyum than irukum...(ennayum sethu than)..
-Santo,.